‘தர்மதுரை-2’ படத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை: சீனுராமசாமி அறிவிப்பு


கடந்த 2016-ம் ஆண்டு சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் வெற்றியடைந்த திரைப்படம் ‘தர்மதுரை’. இந்த திரைப்படத்தை ஆர்.கே.சுரேஷ் தயாரித்திருந்தார். சமீபத்தில் ‘தர்மதுரை’ திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாகவுள்ளதாக ஆர்.கே.சுரேஷ் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, சீனுராமசாமியே 2-ம் பாகத்தையும் இயக்குவார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. கதாநாயகனாக யார் நடிப்பார் என்ற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில் இதுபற்றி சீனுராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “தர்மதுரை பாகம் 2 எடுக்கப் போவதாகச் செய்திகள் வருகின்றன. வாழ்த்துகள். ஆனால், அதை நான் இயக்குவதாக வரும் செய்திகள் உண்மையல்ல. ஆகவே, அது சம்பந்தமான விசயத்தில் எனக்கு எவ்வித சம்பந்தம் இல்லை என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன். விரைவில், என் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வரும்” என்று தெரிவித்துள்ளார்.

x