கணவரின் அஸ்தியோடு குதூகலமாக ஓட்டமெடுக்கும் தாயும் மகள்களும்!


பெரும்பாலான பெண் மைய தமிழ் சினிமாக்கள் குடும்ப வன்முறை, குடும்பத்தின் அழுத்தத்தில் இருந்து தப்பிக்க முயலும் பெண்களின் சோக கீதங்களாகவே வந்திருக்கின்றன. அதிலும் பெண் இயக்குநர்களுக்கான சுதந்திர வெளி தமிழ் சினிமாவில் இன்னும் உருவாகவே இல்லை.

ஆணாதிக்கத்தைப் புறவயமாக எதிர்த்து சினிமா எடுப்பதுதான் பெண் திரை என்ற சிந்தனை இங்குப் படிந்துள்ளது. இதில் ஆண் செய்வதையெல்லாம் பெண்ணும் செய்வது, அல்லது பெண்ணுக்கான குணநலன்களுக்கு நேர்மாறாகச் செயல்படுவது போன்ற கருத்துகள் புதைந்துள்ளன...

”அவர் எடுத்தாரே, இவர் படைத்தாரே!?” என்று ஒரு சிலரின் பெயர்களை சொல்லக்கூடும். ஆனால், தீவிரமான பெண் திரைமொழியில் தங்கள் குரலை நுட்பமாக வெளிப்படுத்தும் பெண் திரை கலைஞர்களுக்கான களம் இன்னமும் வெற்றிடமாகவே உள்ளது. தீவிரம் என்றதும் ‘ஒரு தென்றல் புயலாகி வருதே’ என்பதாகக் கற்பனை செய்ய வேண்டாம்.

ஆணாதிக்கத்தைப் புறவயமாக எதிர்த்து சினிமா எடுப்பதுதான் பெண் திரை என்ற சிந்தனை இங்குப் படிந்துள்ளது. இதில் ஆண் செய்வதையெல்லாம் பெண்ணும் செய்வது, அல்லது பெண்ணுக்கான குணநலன்களுக்கு நேர்மாறாகச் செயல்படுவது போன்ற கருத்துகள் புதைந்துள்ளன.

உதாரணத்துக்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த, ‘கண்ட நாள் முதல்’ திரைப்படத்தின் ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது. இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ப்ரியா இயக்கிய படம் இது. படம் முழுவதும் கதாநாயகி (லைலா) கதாநாயகனை (பிரசன்னா) ‘இஷ்டப்படி’ அறைவாள். தனக்குச் சரி எனப்பட்டதை மட்டுமே செய்வாள். குறிப்பாக ஆண்களுக்கு கட்டுப்படவே மாட்டாள். எதற்கெடுத்தாலும் அவளிடம் கோபம் கொப்பளிக்கும். தன் குடும்பத்துக்காக ‘அடக்கமானவள்’ போல் நடித்து திருமணத்துக்குத் தயாராவாள்.

இப்படியான ஒரு பெண் ஒரு காட்சியில், தனது அலுவலக உயரதிகாரி தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதைச் சொல்லிக் கவலைகொள்வாள். அந்த நபரை நடுத்தெருவில் வழிமறித்து கதாநாயகன் அறைவான். அடுத்த நொடி, ‘இனி வேலைக்கே போக மாட்டேன்...உன்கூடவே இருந்திடுறேன்’ என்று சொல்லி, கதாநாயகனைக் கட்டிப்பிடித்து தலைகுனிந்து, அடக்க ஒடுக்கமாக அழுவாள். அதுவரை அந்தப் படம் கட்டியெழுப்பிய கதாநாயகி பிம்பத்தைத் தவிடுபொடியாக்கும் காட்சி இது.

இத்தனைக்கும் படம் எடுத்தவர் பெண்தான். ஆனால், அவரால் ஆணுடைய பார்வையிலிருந்து சிந்திக்காமல், ஆண் மைய உலகின் விழுமியங்களைக் கடத்தாமல் சுயாதீனமாக தீவிர பெண் மொழியில் திரைப்படம் படைக்க முடியவில்லை. திரை மொழி கோட்பாட்டாளர் லாரா மல்வே இதை, ‘male gaze’ என்றழைத்தார். ‘ஒட்டுமொத்த சினிமா உலகும் ஆணின் பார்வையில் இருந்தே திரைப்படங்களை உருவாக்குகிறது’ என்றார். ‘அதற்கு மாறாகப் பெண்ணை பற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகையும் பெண்ணுடைய பார்வையிலிருந்து சினிமா பேசத் தொடங்க வேண்டும்’ என்றார்.

’அடாவடித்தனமான படைப்பு’ என்று தடை!

இந்நிலையில், பெண் பார்வையில் துணிச்சலான புனைவுகளை திரைப்படமாக எடுப்பதில் தனித்துவம் மிகுந்த செக் குடியரசு நாட்டுப் படங்களைப் பற்றி பேச வேண்டியுள்ளது. 1960-களிலேயே அதற்கான பாய்ச்சல் அங்குத் தொடங்கிவிட்டது. இத்தனைக்கும் சோவியத் யூனியனின் இரும்புக்கரத்தில் நாடு சிக்குண்டிருந்தபோதே, வேரா சிட்டிலோவா என்ற பெண் ‘டெய்சிஸ்’ (Daisies) படத்தை 1966-ல் இயக்கினார். செக் குடியரசில் நிலவும் பெண் அடிமைத்தனத்தை வறட்டுக் கலாச்சார வழமைகளை அந்தப் படம் கேலி செய்தது.

’அடாவடித்தனமான படைப்பு’ என்று தனிக்கைக்குழு படத்துக்கு முத்திரை குத்தி தடை விதித்தது. மறுபுறம், இத்தாலி நாடு பெர்காமோ திரை விழாவில் படத்துக்கு ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருது அளித்து கவுரவித்தது. சிட்டிலோவா தளராமல் மூன்றாண்டுகள் கழித்து, ‘ஃப்ரூட் ஆப் பேரடைஸ்’ (Fruit of Paradise) என்ற தனது அடுத்த படைப்பையும் வெளியிட்டார். அப்போதும் சிக்கல்தாம்.

சென்சார் செய்யப்படாத தனது படத்தை வேண்டுமானால் திரையிடலாம் என்று சிட்லோவா நிபந்தனை விதித்தார். தனக்கு செக் அரசு கட்டுபாடுகள் விதித்திருப்பதால், தன்னால் விழாவில் கலந்துகொள்ள முடியாது என்றும் தெரிவித்தார். தன்னை படங்கள் இயக்கவும் அரசு அனுமதிப்பதில்லை என்றும் புகார் அளித்தார்.

அதிகார மையத்தை அசைத்தவர்!

சில காலம் தனது கணவனின் பெயரில் மறைந்திருந்து விளம்பரப்படங்களை எடுத்து வந்தார். 1976-ல் அமெரிக்கா ‘பெண்கள் திரை விழா ஆண்டு’ கொண்டாட முடிவெடுத்தது. விழா ஒருங்கிணைப்புக் குழு சிட்லோவாவின், ‘டெய்சிஸ்’ படத்தை விழாவில் திரையிட அனுமதி கோரியது. சென்சார் செய்யப்படாத தனது படத்தை வேண்டுமானால் திரையிடலாம் என்று சிட்லோவா நிபந்தனை விதித்தார். தனக்கு செக் அரசு கட்டுபாடுகள் விதித்திருப்பதால், தன்னால் விழாவில் கலந்துகொள்ள முடியாது என்றும் தெரிவித்தார். தன்னை படங்கள் இயக்கவும் அரசு அனுமதிப்பதில்லை என்றும் புகார் அளித்தார்.

உலக நாடுகளைச் சேர்ந்த கலை-இலக்கிய அமைப்புகளை விழா நிர்வாகக்குழு திரட்டியது. சர்வதேச அளவில் செக் அரசுக்கு அழுத்தம் கொடுக்க, அந்நாட்டு அதிபர் அடிபணிந்தார். அதன் பிறகு, சிட்லோவா 2006 வரை 26 படங்கள் இயக்கி சாதனை படைத்தார்.

ஆண் படைப்பாளிகளின் சிந்தனையிலும் சிட்லோவா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆண் பார்வையில் இருந்து, ஆண் மொழியில் சினிமா எடுப்பது என்ற நிலை மாறி பெண் பார்வையில் இருந்து, பெண் மொழியில் சினிமா உருவாக்கும் போக்கு அங்கு வலுப்பெற்றுள்ளது...

இன்றும் சிட்லோவாவுடைய திரைப்படங்களில் இருந்தும் அவரது வாழ்வனுபவங்களில் இருந்தும் படிப்பினை பெற்று, செக் குடியரசு நாட்டில் இயக்குநர்களாகவும் தயாரிப்பாளர்களாகவும் பெண்கள் பலர் ஆழங்கால் பதித்து பண்பாட்டுத் தளத்தில் அசைவுகளை ஏற்படுத்தி வருகின்றனர். அந்நாட்டு ஆண் படைப்பாளிகளின் சிந்தனையிலும் சிட்லோவா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. நாம் முன்னதாகப் பேசிய, ஆண் பார்வையில் இருந்து, ஆண் மொழியில் சினிமா எடுப்பது என்ற நிலை மாறி பெண் பார்வையில் இருந்து, பெண் மொழியில் சினிமா உருவாக்கும் போக்கு அங்கு வலுப்பெற்றுள்ளது. அந்த வகையில் இயக்குநர் மார்ட்டின் ஹார்ஸ்கி 2019-ல் இயக்கிய படம்தான், ’வுமன் ஆன் தி ரன்’ (Women on the Run). அதற்கு முன்பாக 2016-ல் வெளிவந்து கவனம் ஈர்த்த ’ஸ்டக் வித் ஏ பர்ஃபக்ட் வுமன்’ (Stuck with a Perfect Woman) படத்துக்கு இவர் திரைக்கதை எழுதினார்.

3 மகள்களுக்கும் அதிர்ச்சி. உற்சாகமான குரலில், “வாங்க அப்பாவோட அஸ்தி குடுவையை ஒரு பையில் எடுத்துக்கிட்டு மாரத்தான் ஓடுவோம்” என்று சொல்லி பயிற்சி பெற புறப்படுகிறார் தாய்.

’வுமன் ஆன் தி ரன்’ படத்தின் முதல் காட்சியே அதிரடியானது. எந்தக் குறையும் இன்றி கணவருடன் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தவர் நடுத்தர வயதை கடந்துகொண்டிருக்கும் வேரா. கையில் ஒரு குடுவையில் இறந்த கணவரின் அஸ்தி வைத்திருக்கிறார். யுவதிகளாக இருக்கும் 3 மகள்களிடமும் தனது காதல் கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்கிறார். உருக்கமான குரலிலோடும் கனிவான முகபாவனையோடும் 3 மகள்கள் தாயைப் பார்த்து, “சொல்லுங்கம்மா” என்கிறார்கள். “மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க வேண்டும்” என்கிறார் தாய்.

3 மகள்களுக்கும் அதிர்ச்சி. உற்சாகமான குரலில், “வாங்க அப்பாவோட அஸ்தி குடுவையை ஒரு பையில் எடுத்துக்கிட்டு மாரத்தான் ஓடுவோம்” என்று சொல்லி, பயிற்சி பெற புறப்படுகிறார் தாய். இதுவரை ஒரு மீட்டர் தொலைவுக்குக்கூட ஓடிப் பழகிடாத நால்வரும் 3 மாதங்களில் பயிற்சி பெற்று 42 கிலோமீட்டர் ஓட வேண்டும். இதை இந்தப் பெண்கள் எப்படிச் செய்து முடித்தார்கள், இடையில் ஒவ்வொரு யுவதிக்கும் இருக்கும் காதல் உறவுகள், அது தொடர்பான சிக்கல்கள் குளறுபடிகள் என ஓட்டுமொத்த படமும் ஓட்டமெடுத்துப் படுசுவாரசியமாக செல்கிறது. படத்தை இதுவரை 20 கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்திருக்கிறார்கள். ‘Women on the Run’ திரைப்படம் உட்பட அதிசிறந்த 3 செக் திரைப்படங்கள் சென்னையில் திரையிடப்படவிருக்கின்றன.

சென்னை சர்வதேசப் படவிழாவை ஒருங்கிணைத்துவரும் இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் திரைப்படச் சங்கம், புது டெல்லியில் உள்ள செக் குடியரசு தூதரகம், சென்னையில் உள்ள செக் குடியரசு கவுரவ தூதரகத்துடன் இணைந்து அக்டோபர் 22, 23 ஆகிய நாட்களில் செக் திரை விழாவை நடத்தவிருக்கிறது. சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தாகூர் திரைப்பட மையத்தில் மாலை 6 மணி முதல் திரையிடல் நடைபெறவிருக்கிறது.

தொடர்புக்கு: 9840151956 / 8939022618

செக் திரை விழா 22, 23 அக். 2021

1. வுமன் ஆன் தி ரன் (Women on the Run) - 93 நிமிடங்கள் - அக். 22, மாலை 7.15

2. கொல்யா (Kolya) - 105 நிமிடங்கள் - அக்.23, மாலை 6

3. ஐ என்ஜாய் தி வர்ல்ட் வித் யூ (I Enjoy the World with You) - 82 நிமிடங்கள் - அக்.23 மாலை 7:45

x