ஒரு வார்த்தையில் விஜய்-யை விமர்சித்த பூஜா ஹெக்டே


தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த 'முகமூடி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின் தெலுங்கில் பல வெற்றித்திரைப்படங்களில் நடித்து, அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வருபவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் விஜய் கதாநாயகனாக நடிக்கும் 'பீஸ்ட்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார் பூஜா ஹெக்டே.

சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடிய பூஜா, ட்விட்டர் தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு நேரலையில் பதிலளித்தார்.

அப்போது ரசிகர் ஒருவர், “விஜய் பற்றி ஒரு வார்த்தை” எனக் கேட்டதற்கு, “ஒரு வார்த்தை போதாது, இருந்தாலும் நான் டிரை செய்கிறேன், “ஸ்வீட்டஸ்ட்” என பதிலளித்தார். இதைத் தொடர்ந்து, பூஜாவை விஜய் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

x