‘மாநாடு’ ரிலீஸ் தள்ளிவைப்பு?


சிம்பு (‘மாநாடு’)

இந்த வருடத் தீபாவளி ஸ்பெஷல் வெளியீடாகத் திரையரங்குகளில், ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’, சிம்பு நடித்துள்ள ‘மாநாடு', விஷால், ஆர்யா நடித்துள்ள ‘எனிமி’, அருண் விஜய் நடித்துள்ள ‘வா டீல்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது தீபாவளி ரிலீஸ் பட்டியல் இருந்து ‘மாநாடு’ படம் விலகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘அண்ணாத்த’ திரைப்படத்துக்கு மட்டும் தமிழகத்தில் 600-க்கும் அதிகமான திரையரங்கங்கள் ஒதுக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருவதால், 'மாநாடு, எனிமி' போன்ற திரைப்படங்களுக்கு அதிகபட்சமாக தலா 200-க்கும் குறைவான திரையரங்கங்களே கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

எனவே, ‘அண்ணாத்த’ படத்துடன் போட்டிப் போடாமல், வேறொரு நாளில் படத்தை வெளியிடலாம் என 'மாநாடு' தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முடிவு செய்துள்ளதாகக் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'மாநாடு' படத்தை 500-க்கும் அதிகமான திரையரங்கங்களில் வெளியிடத் தயாரிப்பாளர் தரப்பு விரும்புவதால்தான், இந்த முடிவை எடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

‘எனிமி’ திரைப்படமும் தீபாவளி ரிலீஸ் போட்டியிலிருந்து விலகுமா அல்லது ‘அண்ணாத்த’ திரைப்படத்துடன் மோதுமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

x