பிட்லீ


அதிதி ராவ்

வாழ்ந்து மறைந்த பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பதே, வெற்றிக்குச் சிறந்த வழி என்று நம்புகிறார் அதிதி ராவ். மறைந்த கர்னாடக இசைப்பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விருப்பமிருப்பதாகப் பேட்டி ஒன்றில், சூசகமாக இயக்குநர்களுக்கு அறிவித்துள்ளார் அதிதி ராவ்.

'தலைவி' படம் பற்றி கேள்விப்படல போல...

சிவாங்கி

‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி ’குக் வித் கோமாளி’ மூலம் பிரபலமடைந்தவர் சிவாங்கி. இவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்புகளைவிடப் பின்னணி பாடல்கள் பாடுவதற்கான வாய்ப்புகள்தான் குவிகிறதாம். ‘மாயன்’ படத்தில் சிம்புவுடன் இணைந்து ஒரு டூயட் பாடலைப் பாடி சிம்புவின் பாராட்டைப் பெற்று இருக்கிறாராம் சிவாங்கி.

டி.ஆர். இசையிலும் ஒரு பாட்டுப் பாடலாமே...

லட்சுமிமேனன்

நீண்ட காலமாக வாய்ப்பு இல்லாமல் இருந்தாலும், தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் மட்டும்தான் நடிப்பேன் என்று பிடிவாதம் செய்த லட்சுமிமேனன், ‘ஏஜிபி’ என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். ஷீஷோபெர்னியா என்ற மனநோய்க்குப் பாதிக்கப்பட்ட பெண்ணாக இதில் நடிக்கிறார் லட்சுமிமேனன். தொடர்ச்சியாக 13 கதைகளை நிராகரித்த அவர், இதை விரும்பித் தேர்வு செய்ததாகச் சொல்கிறார்.

படத்தோட கதையைவிட, நடிகைகள் சொல்ற கதை சுவாரசியமாதான் இருக்கு!

கீர்த்தி சுரேஷ்

தனக்குத் தெலுங்கிலும் செம மாஸ் இருப்பதால், வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நேரடியாக தெலுங்குப் படத்தில் நடிக்கப் போகிறார் விஜய். தெலுங்கில் இவருக்கு கதாநாயகியாக, கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட வாய்ப்பு அதிகம் என்றொரு பேச்சு கிளம்பியிருக்கிறது. ஏற்கெனவே 'பைரவா', ‘சர்க்கார்’ படங்களில் கீர்த்தி சுரேஷ் விஜயுடன் இணைந்து நடித்திருப்பது சொல்லத் தக்கது.

அப்ப தமிழ் நாயகி, ராஷ்மிகாவா?

கௌதம் வாசுதேவ் மேனன்

மலையளவு இருக்கும் கடனை அடைப்பதற்காக, கிடைக்கும் சான்ஸ்களில் எல்லாம் நடித்துக் கொண்டிருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். ஆனாலும், மீண்டும் இயக்குநராகும் சந்தர்ப்பத்துக்காகக் காத்திருக்கிறார். விஜய் தேவரகொண்டாவுக்காக அற்புதமான காதல் கதை ஒன்றை தயார் செய்துள்ள மேனன், அவரது கால்ஷீட்டுக்காகக் காத்திருக்கிறாராம்.

நம்ம சேது அண்ணாவைக் கூப்பிடுங்களேன்... உங்கள மாதிரியே நடிப்பார்வத்தோட சுத்துறாரு!

x