கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘அண்ணாத்த’, சாணிக்காயிதம் போன்ற தமிழ்த் திரைப்படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. மேலும், தெலுங்கில் மகேஷ்பாபுடன் ‘சர்காரு வாரிபாட்டா’, சிரஞ்சீவியுடன் ‘போலா சங்கர்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது நானி நடிக்கும் ‘தசரா’ என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாகக் கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கிறார்.
இதற்கு முன்பு 2017-ம் ஆண்டு ‘நேனு லோக்கல்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நானியுடன் நடித்த கீர்த்தி சுரேஷ், அதையடுத்து நான்கு ஆண்டுகளுக்குப்பிறகு இத்திரைப்படத்தின் மூலம் மீண்டும் நானிக்கு ஜோடியாக இணைந்துள்ளார்.
‘தசரா’ திரைப்படத்தில் சமுத்திரக்கனி வில்லனாக நடிக்கிறார். மேலும், இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.