விஜய் ஆண்டனியின் ‘கொலை’ திரைப்படம் ‘நைவ்ஸ் அவுட்’-ன் ரீமேக்கா?


விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், ராதிகா சரத்குமார் ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படத்திற்கு ‘கொலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 2007-ம் ஆண்டு ‘9 லைவ்ஸ் ஆஃப் மாறா’ என்ற ஹாலிவுட் திரைப்படத்தையும், 2013-ம் ஆண்டு ‘விடியும் முன்’ என்ற தமிழ்த் திரைப்படத்தையும் இயக்கிய பாலாஜி குமார் இத்திரைப்படத்தை இயக்குகிறார். ‘கொலை’ திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் கதாபாத்திர வடிவமைப்புகளைப் பார்க்கும் போது 2019-ம் ஆண்டு ஹாலிவுட்டில் ரயன் ஜான்சன் இயக்கத்தில் டேனியல் க்ரேக் நடிப்பில் வெளியான ‘நைவ்ஸ் அவுட்’ திரைப்படத்தின் சாயல் இருப்பதாக சமூகவலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

‘நைவ்ஸ் அவுட்’

‘கொலை’

‘நைவ்ஸ் அவுட்’ திரைப்படத்தின் திரைக்கதை மர்மமாக நடக்கும் ஒரு கொலையையும், கொலை செய்யப்பட்டவரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மேலும் எழும் சந்தேகத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும். தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் திரைப்படமும் கொலையை மையமாகக்கொண்டே வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது அதன் தலைப்பின் மூலமே உறுதியாகியுள்ளது.

‘விடியும் முன்’ - ‘லண்டன் டூ ப்ரைடன்’

இயக்குநர் பாலாஜி குமார் 2013-ம் ஆண்டு இயக்கிய ‘விடியும் முன்’ திரைப்படம் 2006-ம் ஆண்டு வெளியான ‘லண்டன் டூ ப்ரைடன்’ என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் தழுவல் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ‘கொலை’ திரைப்படம் வெளியானால்தான் அது ‘நைவ்ஸ் அவுட்’ திரைப்படத்தின் தழுவலா என்பது உறுதியாகும்.

x