நயன்தாராவின் ‘மாய நிழல்’ டீசர் வெளியானது:
அப்பு என்.பட்டாத்திரி இயக்கத்தில், குஞ்சாக்கோ போபன் மற்றும் நயன்தாரா நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ‘நிழல்’. பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைகளைப் பற்றி விசாரிக்கும் நீதிபதியைச் சுற்றி நகரும் இத்திரைப்படத்தின் கதை, விறுவிறுப்பான த்ரில்லர் ஜானரில் மக்களைக் கவர்ந்தது. தற்போது இத்திரைப்படத்தைத் தமிழில் மொழிமாற்றி வெளியிடவுள்ளனர். ‘மாய நிழல்’ என்ற பெயரில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.