கமலைப் பின்பற்றி உடல்தானம் செய்த ரோபோ சங்கர்!


கரோனா காலத்தில் கரோனா நோயாளிகளின் முகாமுக்குச் சென்று, அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி சமூக சேவையில் ஈடுபட்டுவந்தார் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர். இந்நிலையில் அவர் தனது முழு உடலையும் உறுப்புதானம் செய்துள்ளார்.

கமல்ஹாசனின் தீவிர ரசிகரான ரோபோ சங்கர், கமல்ஹாசனின் ஒவ்வொரு பிறந்தநாளன்றும் அவரை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்துச் சொல்லுவது வழக்கம். இந்நிலையில் கமல்ஹாசனின் 67-வது பிறந்தநாளை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை அகர்வால் கண் மருத்துவமனையில் நடத்தினர். அதில் கலந்து கொண்ட நடிகர் ரோபோ சங்கர், கமல்ஹாசனைப் பின்பற்றி தானும் முழு உடல்தானம் செய்தார்.

வரும் நவம்பர் 7-ம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாளன்று, அவரை நேரில் சந்தித்து முழு உடல்தானம் செய்து பெற்ற சான்றிதழைக் காண்பிக்க இருப்பதாகக் கூறியிருக்கிறார் ரோபோ சங்கர்.

x