வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி கதாநாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்போடு தயாராகிவருகிறது. இந்தத் திரைப்படத்தில், விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. காவல் துறை ஊழியராக நடிக்கும் சூரியின் தந்தை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பார் என்ற செய்தியும் வெளியானது.
இந்நிலையில் இத்திரைப்படத்தில் மேலும் ஒரு முக்கியமான நபர் இணைந்துள்ளார். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துவரும் இயக்குநர் கௌதம் மேனன், வெற்றிமாறனின் 'விடுதலை' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். சூரியின் உயர் அதிகாரி கதாபாத்திரத்தில் கௌதம் மேனன் நடிக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறப்படுகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.