சுந்தர் சி-க்கு யோகிபாபு அளித்த பரிசு


யோகி பாபு - சுந்தர் சி

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகிபாபு, தீவிரமான ஆன்மிக ஈடுபாடு கொண்டவர். தனது சொந்த ஊரில் வராஹி அம்மனுக்கு ஒரு கோயில் கட்டியுள்ள யோகிபாபு, வெளிநாடுகளுக்குப் படப்பிடிப்புக்குச் சென்றாலும் அங்குள்ள கோயில்களைத் தேடிச் சென்று தரிசிக்கும் அளவுக்கு ஆன்மிக நாட்டம்கொண்டவர்.

யோகி பாபு - சுந்தர் சி

இந்நிலையில், ‘கலகலப்பு’, ‘கலகலப்பு-2’, ‘ஆக்‌ஷன்’, ‘அரண்மனை’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படங்களைத் தொடர்ந்து, அடுத்து மீண்டும் சுந்தர்.சி இயக்கியுள்ள ‘அரண்மனை-3’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள யோகிபாபு, மகாளய அமாவாசையை முன்னிட்டு சுந்தர்.சிக்கு ஒரு விநாயகர் சிலையைப் பரிசாக வழங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் யோகி பாபு.

x