சிக்கலில் சிக்கித்தவிக்கும் ‘இந்தியன் 2’: ரிலீஸ் ஆகுமா, ஆகாதா?


லைக்கா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் 'இந்தியன் 2' படப்பிடிப்புத் தளத்தில், கடந்த வருடம் கிரேன் விபத்து ஏற்பட்ட பிறகு, இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து லைக்கா நிறுவனத்துக்கும் ஷங்கருக்கும் இடையில் பிரச்சினை வெடிக்க, நீதிமன்றம் வரை சென்றார்கள். பின்னர் தயாரிப்பாளர் சுபாஷ்கரனை சில வாரங்களுக்கு முன்பு ஷங்கர் சந்தித்துப் பேசி, இருவரும் பிரச்சினைக்கு தீர்வு கண்டார்கள் என தகவல் வெளியானது.

இதற்கிடையில் ‘இந்தியன் 2’ திரைப்பட வேலைகளைப் பாதியில் கைவிட்டு, ராம் சரண் நடிக்கும் தெலுங்குப் படத்தை இயக்க ஆரம்பித்துவிட்டார் ஷங்கர்.

’இந்தியன் 2’ திரைப்படத்தில் மீதம் எடுக்க வேண்டியிருக்கும் காட்சிகளைப் படமாக்க, ஷங்கர் தரப்பில் ஒரு பட்ஜெட் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த பட்ஜெட்டில், எவ்வளவு நாட்களில் படப்பிடிப்பு முடியும் என ஒரு ஒப்பந்தத்தில் எழுதி கையெழுத்துப் போட வேண்டும் என லைக்கா தரப்பில் ஷங்கரிடம் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு ஷங்கர் மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்படியான சூழ்நிலையில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடப்பதும், ‘இந்தியன் 2’ திரைப்படம் வெளியாவதும் சந்தேகம்தான் என்று விஷயம் தெரிந்த கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

x