பிட்லீ


வெகுளியான அழகுப் பெண்ணாகவே நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, ‘புஷ்பா’ திரைப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். அல்லு அர்ஜுனுடன் தான் நடித்துள்ள இந்தப் படத்தில், வள்ளி என்ற கிராமத்துப் பெண் கதாபாத்திரம் வித்தியாசமானது என்று அவரே பலரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதற்காக சிறப்பு நடிப்புப் பயிற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார் ராஷ்மிகா.

நீங்க வந்தா மட்டும் போதும்... ராஷ்மி குட்டி...

2019-ம் ஆண்டு வெளியான ‘கே-13’ படத்துக்குப் பிறகு எந்த வாய்ப்பும் இல்லாமலிருந்தார் காயத்ரி. இப்போது சீனு ராமசாமி இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷுடன் இணைந்து அவர் நடித்துள்ள ‘இடி முழக்கம்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதில், தான் நடித்திருக்கும் செவிலியர் கதாபாத்திரம், தனக்கு மேலும் பட வாய்ப்புகளைப் பெற்றுத்தரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் இருக்கிறார் காயத்ரி.

நம்பிக்கை... அதுதானே எல்லாம்...

‘சந்திரமுகி-2’ திரைப்படத்தில், சந்திரமுகி வேடத்தில் அனுஷ்கா நடிப்பார் என்று செய்திகள் வெளியானது. ஆனால், இயக்குநர் பி.வாசு தரப்பில் அனுஷ்காவிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லையாம். அனுஷ்கா தவிர்த்து, வேறு சில நடிகைகளிடமும் ‘சந்திரமுகி-2’ படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம்.

தலைவர் ரஜினி நடிக்க மாட்டாரா?

சூர்யாவைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஓடிடி தளங்களில் தனுஷின் படங்கள் வெளியாகவிருக்கின்றன. சாரா அலிகான், அக் ஷய் குமாருடன் இணைந்து தனுஷ் நடித்துள்ள ‘அட்ரங்கி ரே’ இந்தி திரைப்படமும், ஹாலிவுட்டில் அவர் நடித்துள்ள ‘க்ரேமேன்’ திரைப்படமும் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாம்.

‘ஜகமே தந்திரம்’ மாதிரி ஆகிடாதே?

'ரீ என்ட்ரி' ஆன வைகைப் புயலுக்கு, பல்வேறு தரப்பில் இருந்தும் குடைச்சல் கொடுக்கிறார்கள். 2007-ல் வாங்கிய நிலம் தொடர்பாக சிங்கமுத்து மீது வடிவேலு தொடர்ந்த நில மோசடி வழக்கிலும், வடிவேலு மீதே வரி ஏய்ப்புப் புகாரைத் திருப்பிவிட்டுவிட்டார்கள். டிசம்பரில் வடிவேலுவை குறுக்கு விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி இருக்கிறாராம் நீதிபதி.

கால்வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடியா இருந்தா எப்பூடி?

x