2 பாகங்களாக வெளியாகுமா ‘விக்ரம்’?


ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் நடித்து வரும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முதல் கட்டமாகக் காரைக்குடியில் ஆரம்பித்து, தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்றுவருகிறது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், ஷிவானி, காளிதாஸ் ஜெயராமன் போன்றோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.

‘விக்ரம்’ படப்பிடிப்புத் தளத்தில் பகத் பாசில்-விஜய் சேதுபதி-லோகேஷ் கனகராஜ்

இதுவரை திரையில் ஒன்றாகத் தோன்றியிராத பகத் பாசில், விஜய் சேதுபதி இத்திரைப்படத்தில் பல காட்சிகளில் இணைந்து நடித்துள்ளனர். தற்போது, இத்திரைப்படத்தின் திரைக்கதை மிக நீளமாக உள்ளதால், மொத்தக் கதையையும் ஒரே பாகமாகச் சொன்னால் படத்தின் நீளம் அதிகமாகும் என்று எண்ணிய லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினர், ‘விக்ரம்’ திரைப்படத்தை 2 பாகங்களாகப் பிரித்து வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

x