விஜய் சேதுபதியின் 46-வது திரைப்படத்தை, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’, ‘சீமராஜா’ போன்ற திரைப்படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கி வருகிறார். 2016-ம் ஆண்டு வெளிவந்த ‘சேதுபதி’ திரைப்படத்துக்குப் பிறகு இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி மீண்டும் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பழனி மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் நடைபெற்றுவருகிறது. இத்திரைப்படத்தில் கதாநாயகி பற்றிய அறிவிப்பு ஏதும் வராமலிருந்த நிலையில், தற்போது புதுமுகமான அனுகீர்த்தி வாஸ் கதாநாயகியாக அறிமுகமாகிறார் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு அளவில் நடைபெற்ற ‘பெமினா மிஸ் இந்தியா’ போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்தவர் அனுகீர்த்தி வாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.