‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ திரைப்படம் அடுத்த ஆண்டு ரிலீஸ்


இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மாதவன் தற்போது தயாரித்து, இயக்கி நடித்துள்ள படம் ‘ராக்கெட்ரி : நம்பி விளைவு’. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைபடத்தில், மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார்.

நம்பி ராஜன் வேடத்தில், நம்பி ராஜனுடன் மாதவன்

பல கட்டங்களாக நடந்து வந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது முடிந்து இறுதிக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், 2022-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ திரைப்படம் உலகமெங்கும் தியேட்டர்களில் வெளியாக இருப்பதாக மாதவன் அறிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் என 6 மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

x