இந்திய சினிமாவில் முதன்முறையாக நடிக்கும் மைக் டைசன்: 'லைகர்’ அப்டேட்


விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர் ஆகியோரின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘லைகர்’.

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன், ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, கெட்டப் ஶ்ரீனு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவாகிவரும் இத்திரைப்படத்தில், தற்போது உலகக் குத்துச்சண்டை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த மைக் டைசனும் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

‘ஹேங் ஓவர்’, ‘இப் மேன்-3’ போன்ற புகழ்ப்பெற்ற ஹாலிவுட் திரைப்படங்களில் மைக் டைசன் இதற்கு முன் நடித்திருந்தாலும், இந்தியத் திரைப்படமொன்றில் அவர் நடிப்பது இதுவே முதல்முறையாகும்.

‘லைகர்’ திரைப்படத்தில் அயர்ன் மைக் என்ற வேடத்தில் நடிக்கவிருக்கிறார் டைசன். தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பலமொழிகளில் இத்திரைப்படம் உருவாகிறது.

x