தமிழ் மட்டுமின்றி ஹிந்தி மொழியிலும் நடித்துவந்த சித்தார்த் தற்போது தெலுங்கில் ‘மகாசமுத்திரம்’ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சர்வானந்துடன் இணைந்து அவர் நடித்துள்ள ‘மகாசமுத்திரம்’ படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ள நிலையில் அக்டோபர்14-ந்தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மகாசமுத்திரம் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது சர்வானந்த் மட்டுமே கலந்து கொண்டார். சித்தார்த் கலந்து கொள்ளவில்லை.
இதையடுத்து, அத்திரைப்படத்தின் இயக்குநரான அஜய் பூபதி பேசும்போது, சித்தார்த் இந்த விழாவில் கலந்து கொள்ளாததற்குக் காரணம் அவர் ஒரு அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
என்ன அறுவை சிகிச்சைக்காக அவர் லண்டன் சென்றிருக்கிறார் என்பது பற்றி விரைவில் இது குறித்து சித்தார்த் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.