பிட்லீ 03.10.2021


கங்கனா ரனாவத்

‘தலைவி’ படத்தில் எழுத்தாளராக பணியாற்றிய ரஜத் அரோரா ‘தலைவி’ 2-ம் பாகம் தயாராக வாய்ப்பு இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். ‘தலைவி’ யே வசூல் ரீதியாகச் சொதப்பியதால், 2-ம் பாகத்தில் நடிப்பது பற்றி கங்கன ரனாவத் எதுவும் சொல்லாமல் கனத்த மவுனம் சாதிக்கிறார்.

கோடநாடு சம்பவம் எல்லாம் இதுல வருமா?

கங்கனா ரனாவத்

சமந்தா நாகசைதன்யா இருவரைப் பற்றியும் இதுவரையில் வெளியான வதந்தி உண்மைதான் போல. அவர்களது விவாகரத்து வழக்கு விவகாரம் விரைவில் வெளியாகுமாம். சமந்தாவின் மாமனார் நாகார்ஜுனா திருமணத்திற்குப் பிறகும் சமந்தா தொடர்ந்து நடிப்பதில் விருப்பம் இல்லாமல் இருப்பதாலும், நடிப்பதில் சமந்தா உறுதியாக இருப்பதும்தான் இந்தப் பிரச்சினைக்கு ஆரம்பப்புள்ளி என்கிறார்கள்.

சிவக்குமாரைப் பார்த்து கத்துக்கோங்க நாகார்ஜூன்...

சமந்தா

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் ‘நாய் சேகர்’ படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்போதோ அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கக் கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது லைக்கா நிறுவனம்.

படத்தில் என் தலைவனுக்கு ஜோடி கிடையாதாமே?

கீர்த்தி சுரேஷ்

இந்திய சினிமாவிற்கும் சூப்பர் ஹீரோக்கள் கதைகளுக்கும் ஏழாம் பொருத்தம். இதனால் உள்ளூர் தயாரிப்பாளர்கள் யாரும் இவ்வகை படங்களைத் தயாரிக்க முன்வருவதில்லை. ஆனால், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமோ, மலையாள சினிமாவில் பிரபலமான டொவினோ தாமஸை கதாநாயகனாக வைத்து ‘மின்னல் முரளி’ என்ற சூப்பர் ஹீரோ திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. பல இந்திய மொழிகளில் வெளியாகும் இத்திரைப்படம் வெற்றியடைந்தால், மின்னல் முரளி கதாபாத்திரத்தைக் கொண்டு, வெப் தொடர் எடுக்கும் ஐடியாவும் இருக்கிறதாம் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு.

'இரும்புக்கை மாயாவி' படத்தையும் எடுத்திடுங்க சாரே...

டொவினோ தாமஸ்

மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ படத்தில் கவுரவ கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார் விஜய் சேதுபதி. மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கவிருக்கிறாராம் சேதுபதி.

என்ன சார்... அதுக்குள்ள பிரபு, சத்யராஜ் மாதிரி ஆகிட்டீங்க?

விஜய் சேதுபதி

x