பி.எம்.டபிள்யூ நிறுவனம் ஏற்பாடு செய்த சந்திப்பு: அஜித் உடனான சந்திப்பு பற்றி மரல் யாசர்லூ


மரல் யாசர்லூ - அஜித்

உலகம் முழுக்க பைக்கில் 67 நாடுகளைச் சுற்றிவந்த மரல் யாசர்லூ என்ற பெண்மணியை, சில தினங்களுக்கு முன்பு நடிகர் அஜித் டில்லியில் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆயின. பைக்கில் உலக சுற்றுலாவு போகவிருக்கும் அஜித் சில டிப்ஸ்களை மரல் யாசர்லூவிடம் கேட்டதாகச் செய்திகளும் வெளியாகின. தற்போது அஜித்தைச் சந்தித்ததைப்பற்றி மரல் யாசர்லூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அப்பதிவில், “என்னை பி.எம்.டபிள்யூ கம்பெனி தொடர்பு கொண்டு சக பி.எம்.டபிள்யூ பைக் ரைடர் ஒருவரைச் சந்திக்குமாறு கேட்டுக் கொண்டனர். அஜித்குமாரும் நானும் மெசேஜில் பேசிக்கொண்டோம். இருவரும் சந்திக்க ஏதுவான இடத்தையும், நேரத்தையும் பேசி முடிவெடுத்தோம். நான் அஜித்குமாரை சந்தித்து உலகப் பயணம் பற்றிய எனது அனுபவங்களையும் தகவல்களையும் பகிர்ந்துகொண்டேன், அவர் தென்னிந்தியாவின் பிரபல நடிகர் என்பதை நான் அறிந்துகொண்டேன். அவருக்கு எவ்வளவு புகழ் இருக்கிறது என்பது எங்கள் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகும் வரை எனக்குத் தெரியாது!

மரல் யாசர்லூ - அஜித்

மரல் யாசர்லூ - அஜித்

நான் பொதுவாக மக்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வேலைகள் இருப்பதாக நம்புவதால், அவர்களின் தொழில்களின் அடிப்படையில் நான் அவர்களைக் குறித்து மதிப்பிடுவதில்லை. நம்மை ஒரு மனிதனாக வேறுபடுத்துவது எது என்பதையே பார்ப்பேன். அஜித் ரசிகர்களே, உங்கள் பேவரைட் நடிகரின் உடனான எனது அனுபவம் நன்றாக இருந்தது. அவர் அடக்கமானவர், கனிவானவர், மரியாதைக்குரியவர், மிருதுவானவர், மென்மையாகப் பேசக்கூடியவர். மற்றும் அவர் ஒரு சிறந்த மனிதர் அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

x