போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிக்கும் ‘வலிமை’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ‘வலிமை’ திரைப்படத்தின் முன்னோட்டம் இணையத்தில் வெளியாகியுள்ளது. டார்க் வெப்பில் நடக்கும் குற்றங்களைப் பற்றிய திரைக்கதையாக ‘வலிமை’ இருக்கும் என்று தெரிகிறது. அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் இத்திரைப்படத்தில் நடிக்கும் அஜித், அதிவேக பைக்கில் சீறிப்பாயும் காட்சிகளுடன் இருக்கக்கூடிய இந்த முன்னோட்டம், வெளியான சில மணித்துளிகளில் லட்சக்கணக்கான பார்வையைப் பெற்று வருகிறது.