சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில், ரஜினியின் தங்கையாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அதேபோல், அஜித் நடித்த வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் சிரஞ்சீவியின் தங்கையாக நடித்திருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் தங்கையாக நடிக்கும் திரைப்படங்களின் பட்டியலில், இயக்குநர் செல்வராகவன் நடிக்கும் ‘சாணிக்காயிதம்’ திரைப்படமும் இருக்கிறது. ‘சாணிக்காயிதம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வந்தபோது, செல்வராகவனுக்கு ஜோடியாகக் கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது இத்திரைப்படத்தில் செல்வராகவனின் தங்கையாகக் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான ‘மகாநடிகை’ திரைப்படத்தில், க்ளிசரின் போடாமல் சாவித்திரி அழுது நடித்தது போன்ற காட்சியில், கீர்த்தி சுரேஷ் அற்புதமாக நடித்திருப்பார். தற்போது ‘சாணிக்காயிதம்’ திரைப்படத்திலும் ஒரு சென்டிமென்ட் காட்சியில், க்ளிசரின் போடாமல் அழுது நடித்துப் படப்பிடிப்பு குழுவையே அசத்திவிட்டாராம் கீர்த்தி சுரேஷ். தங்கை கதாபாத்திரம் என்றாலே, இன்னும் சில காலத்திற்கு அது கீர்த்தி சுரேஷுக்குத்தான் என்ற நிலைமை உருவாகி வருகிறதாம்.