2019-ம் ஆண்டு இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மகாமுனி’. ஆர்யா இரட்டை வேடங்களில் நடித்து வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மகிமா நம்பியார் மற்றும் இந்துஜா இருவரும் கதாநாயகியாக நடித்திருந்தனர். மகாமுனி திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும் பல விருதுகளைக் குவித்துவருகிறது.
தற்போது ‘டொரோண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில்’ சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுள்ளார் நடிகை மகிமா நம்பியார். சிறப்பு நடுவர் பிரிவில் சிறந்த நடிகைக்கான விருதும், நடுவர் தேர்வு பிரிவில் சிறந்த படத்துக்கான விருதும் கிடைத்துள்ளன.