நடிகர் ஜெய், தற்போது கதாநாயகனாக நடித்து வரும் ‘சிவசிவா’ திரைப்படத்தின் மூலம் இசை அமைப்பாளராகவும் அவதாரமெடுத்துள்ளார். இன்று மாலை 6 மணிக்கு, ‘சிவசிவா’ திரைப்படத்திலிருந்து ‘காட முட்ட’ என்ற பாடல் வெளியாகிறது. இதுகுறித்து ஜெய் தெரிவிக்கையில் “இசையமைப்பாளராக வேண்டும் என்பதே என்னுடைய கனவு. ஒரு இனிய விபத்தாகத்தான் நான் நடிப்பதற்கு வந்தேன். நடிப்பில் தொடர்ந்தாலும் இசையமைப்பாளர் கனவு மனதிலிருந்துகொண்டே இருந்தது. பத்தொன்பது வருடக் காத்திருப்புக்குப் பிறகு கனவு நிறைவேறியுள்ளது. படபடக்கும் இதயத்துடன் என்னுடைய இசையில் முதல் பாடலை வெளியிடுகிறேன். கனவு மெய்ப்படுவதைப்போன்ற சந்தோஷம் வேறெதுவும் இல்லை” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.