மலையாளத்தில் வெளியான மிகப்பெரும் வெற்றித் திரைப்படமான ‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கில் பவன்கல்யாண, ராணா நடிப்பில் ரீமேக்காகி வருகிறது. ‘பீம்லா நாயக்’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில், நாயகிகளாக ஐஸ்வர்யா ராஜேஷ், நித்யாமேனனும் நடிக்கவிருப்பதாக முன்னதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
ஆனால், இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவிருந்த கதாபாத்திரத்திற்கான காட்சிகள் மலையாள பதிப்பை விடக் குறைவாகவிருப்பதைக் கண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், “இந்த சின்ன கதாபாத்திரத்தில் நடித்தால் எனது ஹீரோயின் இமேஜ் போய்விடும்” என்று இத்திரைப்படத்திலிருந்து வெளியேறி விட்டதாகச் செய்தி வெளியாகியுள்ளது. தற்போது, அவர் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் மலையாள நடிகை சம்யுக்தா மேனன் ஒப்பந்தமாகியிருப்பதாகவும் டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.