“மீண்டும் அண்ணா..வேண்டும் அண்ணா”: விஜய் ரசிகர்களின் விசித்திர போஸ்டர்


விசித்திர போஸ்டர்

பேனர், போஸ்டர் கலாச்சாரம் தமிழகம் முழுவதும் இன்று சினிமா, அரசியல், தனிப்பட்ட குடும்ப விழாக்கள் என்று அனைத்திலும் இரண்டறக் கலந்திருந்தாலும், மதுரை மக்கள் அடிக்கும் போஸ்டர்களும், பேனர்களும் சுவாரஸ்யம் மிகுந்தவையாக இருக்கும். இன்று, முன்னாள் தமிழக முதல்வர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, பெரும்பாலானோர் சமூக வலைதளங்களில் அண்ணாவை வாழ்த்தி ஸ்டேட்டஸ் போட்டுக்கொண்டிருக்கும் வேளையில், மதுரை விஜய் ரசிகர்கள் வித்தியாசமான கோணத்தில் அண்ணாவுக்கு வாழ்த்துச் சொல்ல முடிவெடுத்திருக்கிறார்கள் போலும். வாழ்த்து அறிஞர் அண்ணாவுக்காக இருந்தாலும், அதில் பிரதானமாக தங்கள் அண்ணன் விஜய் இருக்க வேண்டும் என்று தீவிரமாக விஜய் ரசிகர் யாரோ மூளையை கசக்கியதின் வெளிப்பாடுதான் மேலேயிருக்கும் போஸ்டர்.

“மீண்டும் அண்ணா.. வேண்டும் அண்ணா” என்ற போஸ்டர் மதுரையில் பல இடங்களில் ஒட்டப்பட்டு பொதுமக்கள் அனைவரும் “அடக்கடவுளே..” என்று ஒரு கணம் நின்று பார்த்து விட்டுப் போகும்படியாக இருக்கிறது.

x