கங்கனா ரனாவத் நடிப்பில் ‘தலைவி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி, கலவையான விமர்சனத்தைப் பெற்றுவருகிறது. தற்போது, ‘சீதா’ திரைப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளார். அலாகிக் தேசாய் இயக்கவுள்ள இத்திரைப்படத்துக்கு, ‘பாகுபலி’, ‘தலைவி’ திரைப்படங்களுக்குத் திரைக்கதை எழுதிய விஜயேந்திர பிரசாத், அலாகிக் தேசாயுடன் இணைந்து திரைக்கதை எழுதவுள்ளார்.
முதலில் இத்திரைப்படத்தில், சீதை கதாபாத்திரத்தில் நடிக்க கரீனா கபூரிடம் பேச்சு வார்த்தை நடந்தது. சீதை கதாபாத்திரத்தில் நடிக்க கரீனா கபூர் 12 கோடி ரூபாய் சம்பளம் கேட்ட தகவல் பரபரப்பைக் கிளப்பியது. தற்போது, இத்திரைப்படத்தைத் தயாரிக்கும் ‘எ ஹூமன் பீயிங் ஸ்டுடியோ’ நிறுவனம், கங்கனா ரனாவத் இத்திரைப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இத்திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.