தற்போது லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்துவரும் ‘நாய் சேகர்’ திரைப்படத்தை தொடர்ந்து, வடிவேலுவை வைத்து 5 படங்களை லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இளம் இயக்குநர்களிடம் வடிவேலுவுக்கு ஏற்ற கதைகளையும் லைக்கா நிறுவனம் கேட்டுவருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கிய நலன் குமாரசாமியிடம் வடிவேலுவுக்கு ஒரு கதை தயார் செய்து தரும்படி லைகா நிறுவனம் கேட்டிருக்கிறது.
‘நாய் சேகர்’ திரைப்படத்தை தொடர்ந்து, ‘சந்திரமுகி-2’-ல் வடிவேலு நடிக்கவிருப்பதாக உறுதிசெய்யப்பட்ட நிலையில், அடுத்தடுத்து அவர் நடிக்கும் திரைப்படங்களைப் பற்றிய அறிக்கைகளும் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.