ஏழைக் குடும்பத்துக்கு பிரகாஷ்ராஜ் அளித்த பரிசு


ஜேசிபி வாகனத்தை பரிசளிக்கும் பிரகாஷ்ராஜ்

நடிகர் பிரகாஷ்ராஜ், தன்னுடைய பெயரில் 'பிரகாஷ்ராஜ் ஃபவுண்டேஷன்’ என்ற தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பலப்படுத்த உதவிகள் செய்துவருகிறார்.

தற்போது ‘பிரகாஷ்ராஜ் பவுண்டேசன்’ சார்பாக, மைசூர் ஸ்ரீரங்கப்பட்டினத்தின் அருகில் வசிக்கும் ஏழைக் குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்காக ஜேசிபி வாகனத்தை வழங்கி, அக்குடும்பத் தலைவருக்குப் பணி வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார் பிரகாஷ்ராஜ்.

குடும்பத்தலைவர்

இந்தச் செயலுக்குப் பல தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணமுள்ளன. இந்நிலையில், பலரும் பிரகாஷ்ராஜிடம் ட்விட்டரில் உதவி கேட்க ஆரம்பித்துள்ளனர்.

x