மீண்டுவரும் யாஷிகா ஆனந்த்


மருத்துவமனையில் யாஷிகா

சமீபத்தில், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் யாஷிகா ஆனந்த்தின் உடல்நிலை சற்றே தேறி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான கலைஞர்களில் ஒருவரான யாஷிகா ஆனந்த், ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘ஜாம்பி’ போன்ற படங்களில் நடித்துள்ளார். ‘கடமையைச் செய்’, ‘ராஜபீமா’, ‘இவன்தான் உத்தமன்’, ‘பாம்பாட்டம்’ போன்ற படங்களில் நடித்துவந்தார். இந்நிலையில், அவர் கடந்த ஜூலை மாதத்தில், சென்னை ஈசிஆர் சாலையில் தன் தோழிகளுடன் கார் ஓட்டிக் கொண்டு வந்தபோது விபத்தில் சிக்கினார். இதில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவானி, நிகழிடத்திலேயே உயிரிழந்தார்.

யாஷிகா ஆனந்த்

யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இடுப்பு மற்றும் கால்களில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள யாஷிகா ஆனந்த், எழுந்து நடக்க 6 மாதகாலம் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் யாஷிகா, தன்னுடைய தாயார் மற்றும் செல்ல நாய்க்குட்டியுடனிருக்கும் படத்தை ட்விட்டரில் பதிவேற்றி “என்னுடைய வலிமை” என்று பதிவிட்டுள்ளார்.

x