கேக் வெட்டி 61-வது பிறந்தநாளை கொண்டாடிய வடிவேலு


வடிவேலுவின் பிறந்தநாள் கொண்டாட்டம்

திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து வெகு காலம் விலகியிருந்த வடிவேலு, தற்போது சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர்’ திரைப்படத்தின் மூலம் நடிப்பில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து நாய் சேகர் திரைப்படத்தைப் பற்றிய அறிவிப்பை இயக்குநர் சுராஜுடன் இணைந்து வெளியிட்டார் வடிவேலு. இந்நிலையில் தன்னுடைய 61-வது பிறந்தநாளை கேக் வெட்டி சுராஜ் அருகிலிருக்கக் கொண்டாடியுள்ளார் வடிவேலு. அவர் கேக் வெட்டி கொண்டாடி மகிழும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது

x