என்னை சோலோவா படம் பிடிக்காதீங்க..அவங்களை எடுங்க!


பி.வி.சிந்து, தீபிகா படுகோன்

ஒலிம்பிக் வெற்றியாளர் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவும் நடிகை தீபிகா பட்கோனும் மும்பையில் நேற்றிரவு இணைந்து உணவகத்துக்குச் சென்றனர்.

சிந்துவும் தீபிகாவும் ஒன்றாக காரில் இருந்து இறங்குவதை கண்டு புகைப்படக் கலைஞர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டனர். இருவரும் இணைந்தே புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர். ஆனால், தீபிகாவை தனியாகப் படம் பிடிக்க வேண்டும் என்று புகைப்படக்காரர்கள் கேட்டபோது தீபிகா மறுத்துவிட்டார். விடாமல் நச்சரித்தவர்களிடம், “என்னை சோலோவா படம் பிடிக்காதீங்க...அவங்களை எடுங்க” என்றார். பிறகு ஒரு நொடி மட்டும் தனியாக நின்று போஸ் கொடுத்துவிட்டு சிந்துவுடன் உணவகத்துக்குள் சென்றார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் பி.வி.சிந்து. இரு முறை ஒலிம்பிக் பதக்கங்களை வென்று வரலாறு படைத்த ஒரே இந்தியப் பெண் அவர். விளையாட்டு வீராங்கனை பி.வி.சிந்துவின் அருமை பெருமை அறிந்த நடிகை தீபிகா படுகோனுக்கு அன்புகள். ஆனால், புகைப்படக்காரர்களுக்கு சினிமா மோகம் விடுவதாக இல்லையே!

x