ரஜினியைச் சந்தித்து ஆசிபெற்ற ஷங்கரின் மகள்


இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், தற்போது நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், முத்தையா இயக்கும் ‘விருமன்’ திரைப்படத்தில், நடிகர் கார்த்திக் உடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு ‘விருமன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானபோது இத்திரைப்படத்தில் இயக்குநர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிக்கிறார் என்று அவருடைய புகைப்படத்துடன் அறிவிப்பு வெளியாகியிருந்தது.

’விருமன்’

புதுமுகமாக அறிமுகமாகும் அதிதி சங்கருக்கு திரைத்துறையினர் பலரிடம் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமிருந்தன. தற்போது, அதிதி சங்கர் நடிகர் ரஜினிகாந்த்தை அவருடைய வீட்டிற்குச் சென்று சந்தித்து, ஆசி பெற்றிருக்கிறார். அவர் ரஜினிக்குப் பூங்கொத்து அளிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

x