அரபி மொழியில் தயாராகும் மஞ்சு வாரியரின் அடுத்த திரைப்படம்


மஞ்சு வாரியர்

1990-களில் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்த மஞ்சு வாரியர், தன்னுடைய திருமணத்துக்குப்பின்பு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். நீண்ட திருமண வாழ்வு விவாகரத்தில் முடிந்தபின், மீண்டும் திரைத் துறைக்கு வந்து தற்போது மலையாள சினிமாவில் தனது 2-வது இன்னிங்சில் மிகவும் பிஸியாக இருக்கிறார்.

2019-ம் ஆண்டு வெளியான 'அசுரன்' திரைப்படத்தில் பச்சையம்மா கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார் மஞ்சு வாரியர். தற்போது, மலையாளம் மற்றும் அரபி மொழியில் உருவாகும் ஒரு திரைப்படத்தில் மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

ஆயிஷா

'ஆயிஷா' என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை, அறிமுக இயக்குநரான ஆமீர் பள்ளிக்கல் என்பவர் இயக்கவுள்ளார். ஒரே நேரத்தில் மலையாளம் மற்றும் அரபியில் உருவாகும் இத்திரைப்படத்தைத் தான் ஆவலாக எதிர்பார்ப்பதாக மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.

x