“நீயே எனது ஆசீர்வாதம் ஜோ...” : 15 வருட திருமண வாழ்வின் மகிழ்ச்சியில் சூர்யா-ஜோதிகா


சூர்யா -ஜோதிகா

தங்களது 15-வது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் வகையில், சூர்யா மற்றும் ஜோதிகா தங்களது சமூக வலைதள பக்கங்களில் ஒருவருக்கொருவர் வாழ்த்தையும் அன்பையும் பரிமாறிக்கொண்டனர். சூர்யா மற்றும் ஜோதிகா இருக்கும் புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்து, "15 வருடகால சந்தோஷம்.. அனைவரது அன்பிற்கும் ஆசீர்வாதத்திற்கும் நன்றி" என்று தெரிவித்திருந்தார் ஜோதிகா. அந்தப் பதிவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த சூர்யா, "நீயே என்னுடைய ஆசீர்வாதம் ஜோ.. அனைவரின் அன்பிற்கும், மரியாதைக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

x