கங்கனா ரனாவத்தின் அடுத்த பிளான் : ரஜினி (அ) விஜய்


கங்கனா ரனாவத்

பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்கள் தமிழ் சினிமாவில் நடித்து இங்கே பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்ற வரலாறு தமிழ் சினிமாவுக்கு உண்டு. மனிஷா கொய்ராலா, தீபிகா படுகோனே, வித்யா பாலன், ஐஸ்வர்யா ராய், ஹுமா குரேஷி என்ற வரிசையில் தற்போது இணைந்திருப்பவர் கங்கனா ரனாவத்.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி இணைந்து நடித்துள்ள 'தலைவி' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான இத்திரைப்படத்திற்குப் பெருமளவு எதிர்பார்ப்பு இருந்தது. இத்திரைப்படத்தின் மூலம் தமிழில் தனக்குப் பெரிய மார்க்கெட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் கங்கனா ரனாவத். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் "ஜெயலலிதாவின் வேடத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் மூலம் தமிழில் எனக்கு நல்ல அறிமுகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அடுத்ததாகத் தமிழில் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, விஜய் ஆகியோருடன் இணைந்து நடிக்கத் தான் ஆசைப்படுவதாகவும்" தெரிவித்துள்ளார். தொடர்ந்து தமிழ் சினிமா இயக்குநர்களிடம் கதை கேட்கும் பணியிலும் பிசியாக இருக்கிறார் கங்கனா ரனாவத்.

x