தன் மீதான பிம்பத்தை உடைக்க சமுத்திரக்கனி முயற்சி!


சமுத்திரகனி

கருத்துச் சொல்லும் கதாபாத்திரத்தின் அடையாளமாக மாறிப்போனவர் சமுத்திரக்கனி. அப்பா, ஆசிரியர், சமூக செயற்பாட்டாளர் என்ற மென்மையான மற்றும் புரட்சிகர கதாபாத்திரங்களுக்கு அளவெடுத்துச் செய்தவர் போல், தமிழ் சினிமா இயக்குநர்கள் சமுத்திரக்கனியைப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

தன் மீதுள்ள இந்த பிம்பத்தை உடைக்க முடிவெடுத்துவிட்டார் சமுத்திரக்கனி. புகழ்பெற்ற இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரன் அடுத்ததாக இயக்கும் க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தில், அதிரடியான சிபிசிஐடி அதிகாரியாக நடித்து முடித்துள்ளார் சமுத்திரக்கனி.

’நான் கடவுள் இல்லை’

‘நான் கடவுள் இல்லை’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கும் 71-வது திரைப்படமாகும். இதில் எஸ்.ஏ.சந்திரசேகரனும் ஓய்வுபெற்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமுத்திரக்கனிக்கு ஜோடியாக இனியாவும், காவல் துறை அதிகாரி கதாபாத்திரத்தில் சாக்‌ஷி அகர்வாலும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முழுதும் முடிவடைந்துவிட்டது. விரைவில் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது இத்திரைப்படம்.

x