ஒரு திரைப்படத்தின் வெற்றியை அதன் தரம், கதையம்சம் என்ற காரணிகள் தாண்டி வேறு சில விசயங்களும் தீர்மானிக்கும். அதில் ஒரு முக்கிய காரணிதான் ‘சர்ச்சை’. ஒரு திரைப்படத்தால் சமூகத்தில் சர்ச்சை கிளம்பினால், மக்களுக்கு அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்கத் தோன்றும். இதுவே அப்படத்தின் வசூலைப் பன்மடங்கு உயர்த்தும். அப்படி வெற்றிபெற்ற திரைப்படம்தான் சென்ற ஆண்டு வெளிவந்த ‘திரௌபதி’.
சாதிய கண்ணோட்டத்துடன் ஒருசாரரை மிகவும் தப்பாகச் சித்தரித்து வெளியான இத்திரைப்படத்தின் கதாநாயகனான ரிச்சர்ட் ரிஷி மற்றும் இயக்குநர் மோகன் ஜி 2-தாக இணையும் திரைப்படம்தான் ‘ருத்ர தாண்டவம்’. தர்ஷா குப்தா கதாநாயகியாவும், பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
கிறுத்துவ சிறுபான்மையினருக்கு எதிராகவும், கம்யூனிச சித்தாந்தவாதிகளுக்கு எதிராகவும் பல கருத்துகளைக் கொண்ட இத்திரைப்படத்தின் முன்னோட்டம், சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதன்பலனாக இந்தப் படத்தின் முன்னோட்டத்தை இதுவரை யூடியூப்பில் 53 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர்.
தற்போது இத்திரைப்படத்தின் ‘அம்மாடி’ என்ற பாடல், விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இப்பாடலைப் படியுள்ளார்.