தான்யா ஹோப்பின் தயாள குணம் : குவியும் பாராட்டுகள்


கிராம மக்களுடன் தான்யா ஹோப்

தெலுங்கு, கன்னட திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம்வருபவர் தான்யா ஹோப். தமிழில் அருண் விஜயின் ‘தடம்’ படத்தில் அறிமுகமானவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ‘தாராளப் பிரபு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு திரும்பிவந்தார். தற்போது ‘குலசாமி’ என்ற படத்திலும், சுந்தர்.சி இயக்கும் ஒரு படத்திலும் கதாநாயகியாக நடித்துவருகிறார். நடிகை என்பதைக் கடந்து, தயாள குணம் நிறைந்தவாராக இருக்கிறார் தான்யா ஹோப்.

கரோனா பெருந்தொற்றுக் காலகட்டத்தில் பல்வேறு மக்கள் பணிகளை விளம்பரம் இன்றி செய்து வருகிறார். குறிப்பாக, எளிய மக்களின் பசியை போக்கும்விதமாக உணவளித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இதற்காக மாதம் ஒரு கிராமத்தைத் தேர்வு செய்து, அந்த அந்த கிராமத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு அளித்து வருகிறார். இந்த திட்டத்தின் மூலம் சராசரியாக நாள்தோறும் 200 பேருக்கான உணவு தேவையைப் பூர்த்தி செய்து வருகிறார்.

மக்கள் பணியில் தான்யா ஹோப்

‘ஷைன் சில்ட்ரன்‘ ஹோம் என்ற தொண்டு நிறுவனத்துக்கு, ஒவ்வொரு மாதமும் பொருளாதார ரீதியாகவும் உதவிகள் செய்து வருகிறாராம் தான்யா ஹோப்

தான்யாவின் இந்த தன்னலமற்ற சேவைக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

x