பிட்லீ


ஸ்ருதி ஹாசன்

தான் நடித்த ‘லாபம்’ படத்தின் புரொமோஷன் வேலைகளை முற்றிலுமாகத் தவிர்த்து வருகிறாராம் ஸ்ருதி ஹாசன். சமீபத்தில் ‘லாபம்’ பற்றிய அறிவிப்பை அத்திரைப்படம் தொடர்புடைய அனைவரும் சமூக வலைதளத்தில் பதிவிட்ட போதும், ஸ்ருதிஹாசன் மவுனம் சாதித்தார். அப்புறம் என்ன, கோலிவுட்டை மறந்து பாலிவுட் பக்கம் கரை ஒதுங்கிவிட்டார் ஸ்ருதி என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.

நாங்களும் உங்கள மாதிரிதான் ஸ்ருதி, லாபம் பார்க்க விரும்பல...

தமிழில் சன்னி லியோன் கதாநாயகியாக அறிமுகமாகும் படத்துக்கு, ‘ஓ மை கோஸ்ட்’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். ஓடிடியில் இல்லாமல், அகன்ற திரையில் படம் வெளியாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம் சன்னி லியோன்.

சன்னியப் பார்த்தா, பயமா வரும்?

டிக்டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமான மிர்ணாளினி ரவி கதாநாயகியாக நடிக்கும் ‘ஜாங்கோ’வை விளம்பரப்படுத்துகையில், இந்தியாவின் முதல் ‘டைம் லூப்’ வகைத் திரைப்படம் என்றார்கள். 2014-ல் வெளிவந்த ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ என்ற படம் டைம் லூப் வகைத் திரைப்படம்தான், அதைப் படக்குழுவினர் பார்க்கலையா? என்று சமூக வலைதளத்தில் கலாய்க்கிறார்கள் நெட்டிசன்கள்.

விளம்பரத்துலயும் அற உணர்வை எதிர்பாக்குறாங்களே...

2013-ம் ஆண்டு வெளிவந்த ‘சமர்’ திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் விஷாலுடன் நடித்த சுனைனா, தற்போது விஷாலுடன் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். ‘சில்லுக் கருப்பட்டி’ படத்துக்குப் பிறகு, சுனைனாவின் மார்க்கெட் மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக ஏறிவருகிறதாம்.

எட்டு வருடத்தில் கெட்டிக்கார வளர்ச்சி...

சுனைனா

பார்த்திபன் நடிப்பில் உருவான ‘ஒத்த செருப்பு; சைஸ் 7’ படத்தின் ஹிந்தி ரீமேக், படுவேகமாக நடந்து வருகிறதாம். அபிஷேக் பச்சன் தயாரித்து நடிக்கும் இத்திரைப்படத்தை பாலிவுட் வட்டாரமும் ஆவலாக எதிர்பார்த்து வரும் நிலையில், அபிஷேக் பச்சனை ட்விட்டரில் புகழ்ந்து தள்ளியுள்ளார் பார்த்திபன்.

தன் குஞ்சு பொன் குஞ்சு...

x