எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா சமாதியில் கங்கணா அஞ்சலி


நடிகை கங்கணா ரணாவத் அருகில் இயக்குநர் விஜய்

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா சமாதியில் பிரபல நடிகை கங்கணா ரணாவத் அஞ்சலி செலுத்தினார்.

பிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'தலைவி' என பெயர் சூட்டப்பட்டுள்ள அப்படம் செப்டம்பர் 10 தேதி திரைக்கு வருகின்றது. இந்நிலையில் இன்று காலை நடிகை கங்கணா ரணாவத் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் எம்.ஜிஆர்., கருணாநிதி மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உடன் திரைப்பட இயக்குநர் விஜய் உள்ளிட்டோரும் தலைவர்களின் சமாதிகளுக்கு முன்பாக நின்று மரியாதை செலுத்தினர்.

நடிகை கங்கணா வருகையை ஓட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டிருந்தது.

x