சினிமா பிட்ஸ்


பிட்லீ
readers@kamadenu.in

விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் சிவகார்த்திகேயன் பாடல் ஒன்றை எழுதப்போவதாக அறிவிப்பு வெளியான நிலையில், இன்னொரு பாடலை தனுஷ் எழுதப்போகிறார் என்ற அறிவிப்பும் வெளிவந்திருக்கிறது. இப்படத்தில் தனுஷின் அண்ணன் செல்வராகவன் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தக் காலத்துல ஏன் எம்ஜிஆர், சிவாஜி எல்லாம் பாட்டெழுதல?

நகரத்துக் கதைகளை மட்டுமே எடுத்து வந்த கௌதம் மேனன், முதன் முறையாக ‘வெந்து தணிந்தது காடு’ என்ற பெயரில் கிராமத்துக் கதையை படமாக்கி வருகிறார். சிம்பு நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகிக்காக புதுமுகத்தைத் தேடியவர், கன்னடத்தில் பிரபலமாக இருக்கும் கயடு லோஹரை கதாநாயகியாக்கும் முயற்சியில் இருக்கிறாராம்.

'பத்தொம்பதாம் நூற்றாண்டு' மலையாளப் படத்தைப் பார்த்திருப்பாரோ?

ஷில்பா ஷெட்டி-யின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாசப் படம் எடுத்த வழக்கில் கைதானதைத் தொடர்ந்து, ஷில்பா மீதும், அவரது தாயார் சுனந்தா ஷெட்டியின் மீதும் வழக்கு பாய்ந்திருக்கிறது. யோகா சொல்லித்தரும் 'வெல்னஸ் சென்டர்' ஆரம்பித்துத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அவர்கள் மீது புகார். இதையடுத்து, ஷில்பாவின் குடும்பம் திட்டமிட்டுப் பழிவாங்கப்படுவதாக பாலிவுட்டில் ஒரு பேச்சு எழுந்திருக்கிறது.

பட்ட காலிலே படும்...

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான ஆலியா பட், காத்ரீனா கைஃப், ப்ரியங்கா சோப்ரா மூவரும் இணைந்து ஒரே படத்தில் நடிக்கிறார்கள். ‘ஜீ லி ஸாரா’ (Jee Le Zaara) என்ற இத்திரைப்படம் ஒரு ரோட் மூவியாம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ஃபர்கான் அக்தர் இயக்கவுள்ள இப்படம் பெரும் பொருட்செலவில் தயாராகிறது.

தமிழ்ல ரீமேக் பண்ணுனா யாரெல்லாம் நடிப்பாங்க?

தியேட்டர், ஓடிடி-யைத் தொடர்ந்து நேரடியாக சின்னத்திரையிலும் தோன்றப் போகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் அவரது ‘திட்டம் இரண்டு’ திரைப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து, அடுத்த படமான ‘பூமிகா’ நேரடியாக விஜய் டிவி-யில் வெளியாகவுள்ளதாம்.

இது வளர்ச்சியா, வீழ்ச்சியான்னு சொல்லத் தெரியலியே?

x