பிட்லீ
readers@kamadenu.in
‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கிறார் ஆர்யா. ஆண்ட்ரியா, சித்தார்த்தை வைத்து ‘அவள்’ திரைப்படத்தை இயக்கிய மிலின் ராவ் இயக்கவுள்ள இத்தொடர் பெரும் பொருட்செலவில் உருவாகிறது.
நகைச்சுவை தொடர்ல நடிங்க சார்...
நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு தமிழ்த் திரைப்படமாகிறது. ஷகிலாவே தயாரிக்கும் இப்படத்தில், நாயகியாக நடிக்க தற்போது ‘வலிமை’ படத்தில் நடித்து வரும் ஹூமா குரேஷியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
நல்லா சாப்ட்டு உடம்பைத் தேத்துங்க ஹூமா மேடம்...
விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் கோகுல், அப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கு ‘கொரோனா குமார்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். தொடர்ந்து விஜய் சேதுபதி பிஸியாக இருப்பதால் இப்படத்தில் சிம்புவை நடிக்கவைக்கிறார்களாம்.
எத்தனாவது அலையில இந்தப் படம் வெளியாகும்னு தெரியலியே?
கைவசம் பத்துக்கும் மேற்பட்ட படங்களை ரிலீஸுக்காக வைத்திருக்கும் விஜய் சேதுபதி, அடுத்ததாக ஹிந்தி வெப் சீரிஸ் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இத்தொடரில் அவருடன் ஷாகித் கபூர், ராஷி கன்னா இணைந்து நடிக்கிறார்கள். ‘சங்கத்தமிழன்’, ‘துக்ளக் தர்பார்’ படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கவுள்ளாராம் ராஷி கன்னா.
மாஸ்டர் மாதிரி மாஸா இன்னொரு வில்லன் கேரக்டர் பண்ணு தல...
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்த்திரைக்கு வருகிறார் அஞ்சலி. இயக்குநர் ராம் இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ள திரைப்படத்தில் நிவின் பாலியே கதாநாயகன்.
நவரசா நல்லாயிருந்துச்சு பேபி...