சினிமா பிட்ஸ்


பிட்லீ
readers@kamadenu.in

தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தரும் படங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், ‘திட்டம் இரண்டு’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்தப் படம் தியேட்டரில் அல்ல, சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

ஓடிடி- உங்களை அன்புடன் வரவேற்கிறது ஐஸு...

‘கிடார் கம்பி மேலே நின்று’, ‘வாடிவாசல்’ திரைப்படங்களுக்குப் பிறகு, சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. அதன் பிறகு இயக்குநர் பாலாவின் படத்தில் நடிக்கிறாராம். ‘நந்தா’, ‘பிதாமகனை’த் தொடர்ந்து மூன்றாவது முறையாக அமையவிருக்கும் இக்கூட்டணியைப் பற்றிய அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

'வேண்டாம் மை சன்...'னு சிவகுமார் தடுக்கலியா?

ஹன்சிகா மோத்வானி தெலுங்கில் நடிக்கப் போகிற படம் புதிய சாதனை படைக்கிறது. வெளியாகும் முன்பே இவ்வளவு பில்டப்பா? என்று மிரளத் தேவையில்லை. 105 நிமிடம் மட்டுமே ஓடும் இந்தப் படத்தை, ஒரு கட் கூட இல்லாமல் ஒரே டேக்கில் எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார் இயக்குநர் ராஜா துஸ்ஸா. ‘105 மினிட்ஸ்’  என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு எடிட்டிங் வேலையும் தேவையே இல்லையாம்.

எல்லாம் ஓடிடி இருக்கிற தைரியம் தானே?

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படும் படத்தில், கதாநாயகியாக நடிக்க தீபிகா படுகோனிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். ஏற்கெனவே ‘கோச்சடையான்’ அனிமேஷன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்திருந்தார்.

வயசானவங்க கூட ஜோடி சேராதீங்க, தலைவரே...

மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு-2’ படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார் ஆண்ட்ரியா. சமீபத்தில் வெளியான ‘நவம்பர் ஸ்டோரி’ தொடரில், தமன்னாவின் தங்கையாக நடித்த நமிதா கிருஷ்ணமூர்த்தி ‘பிசாசு - 2’ படத்திலும் இணைந்துள்ளாராம்.

வளர்ச்சியில் சீனியர் நமிதாவை மிஞ்ச வாழ்த்துகள்...

x