சினிமா பிட்ஸ்


‘பூலோகம்' பட இயக்குநர் கல்யாண் இயக்கவுள்ள, ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் பிரியா பவானி ஷங்கர். ‘இந்தியன் 2', ‘பொம்மை', ‘ஹாஸ்டல்' என்று அடுத்த வருடம் வரை தொடர்ந்து படங்களைக் கைவசம் வைத்துள்ளாராம் பிரியா பவானி ஷங்கர்.

மண்ணுக்கேத்த பொண்ணு...

இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆறரை கோடி ஃபாலோயர்களைப் பெற்று ஆசியாவிலேயே முன்னிலையில் இருக்கிறார் பிரியங்கா சோப்ரா. இரண்டாவது இடத்தில் 6.3 கோடி ஃபாலோயர்களுடன் நடிகை ஷ்ரத்தா கபூர் இருக்கிறாராம். இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
விளம்பரப் பதிவு போடுவதன் மூலமே இவர்கள் பல கோடிகள் சம்பளமாகப் பெறுகிறார்கள்.

இன்ஸ்டா என்றாலே பெண்களின் பேட்டைதானே?

மலையாளப் படமான ‘அய்யப்பனும் கோஷியும்' தெலுங்கில் பவன் கல்யாண், ராணா நடிப்பில் தயாராகிறது. பவன் கல்யாணின் ஜோடியாக நடிக்க நித்யா மேனன் ஒப்பந்தமாகி இருக்கிறார். மூலக் கதையின்படி மலைவாசி பெண் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெலிஞ்சிடாதீங்க, அந்தப் பூசுன உடம்புதான் உங்களுக்கு அழகே...

காஜல் அகர்வால் ‘உமா' என்ற இந்திப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். முழுக்க முழுக்க நாயகியை மையப்படுத்திய கதை இது. இதேபோல் ஹன்சிகா, தெலுங்கில் கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் ‘மை நேம் இஸ் ஸ்ருதி' படத்தில் நடிக்கவுள்ளாராம்.

ஸ்ருதி ஏதாவது படத்துல நடிக்கிறாரா??

நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வரும் நயன்தாரா, அடுத்ததாக முழு நகைச்சுவை திரைப்படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். 'எலி' திரைப்படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்குகிறார்.

‘எலி'யாக இல்லாமல், ‘புலி'யாகப் பாயுங்க தோழி...

x