‘மாஸ்டர் ஷெப்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தெலுங்கு பதிப்பைத் தொகுத்து வழங்கப் போகிறார் தமன்னா. திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், வெப் தொடர், டிவி நிகழ்ச்சி என்று கிடைக்கிற வாய்ப்பை எல்லாம் தவறவிடாமல் பார்த்துக்கொள்கிறார் தமன்னா. தமிழில் இந்நிகழ்ச்சியை விஜய் சேதுபதியும், கன்னடத்தில் கிச்சா சுதிப்பும் தொகுத்து வழங்கவிருக்கிறார்கள் என்பது கூடுதல் செய்தி.
காற்றுள்ளபோதே தூற்றுகிறார்கள் போலிருக்கிறது!
விஜய் சேதுபதி நடித்து ஹிட்டான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் பஞ்சாப் மொழி ரீமேக்கில் ஹர்பஜன் சிங் நடிக்கிறார். தற்போது ‘ஃப்ரெண்ட்ஷிப்’ என்ற தமிழ்ப் படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் ஹர்பஜன், அடுத்து பஞ்சாப் மொழிப் படத்தில் நடிக்கவுள்ளாராம்.
சிங்கமே, இப்ப ஏன் நீங்க தமிழ்ல ட்விட் பண்றதில்ல?