மஹா
கலைஞர் செய்திகள் சேனலில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் வழியே பிரபலமானவர் தொகுப்பாளினி சுமையா. அண்மையில் சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் பின்னணியிலான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் நன்மதிப்பை ஈட்டியிருக்கிறார். அவருடன் ஓர் உரையாடல்...
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மட்டுமே வழங்கி வந்த உங்களுக்கு அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளின் அனுபவம் எப்படி இருந்தது?
தேர்தல் என்றாலே பிரச்சாரம், கொள்கை சார்ந்த பேச்சுனு சீரியஸா இருக்கும்னு நினைத்திருந்தேன். உள்ளே வந்த பிறகு தான் இங்கேயும் ஜாலியான பல நல்ல விஷயங்கள் இருப்பதை தெரிந்துகொண்டேன். அரசியல் ரீதியாக நமக்கு இருக்கும் கருத்தை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க மீடியா மிகப் பெரிய பாலம் தானே.