ரசிகா
readers@kamadenu.in
‘லட்சுமி வந்தாச்சு’, ‘தெய்வ மகள்’ டிவி தொடர்களின் வழியாக பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போல் பட்டிதொட்டியெங்கும் அறியப்பட்டவர் வாணி போஜன். தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான கதாநாயகி. சுத்தமான தமிழ் உச்சரிப்பு, கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பு, கவர்ந்திழுக்கும் சிரிப்பு என கோலிவுட்டின் செல்லமாகியிருக்கிறார். ராதாமோகன் இயக்கத்தில் ஓடிடியில் வெளியாகியிருக்கும் ‘மலேஷியா டூ அம்னிஷியா’ திரைப்படத்தில் நடிப்புக்காக பாராட்டப்பட்டு வரும் அவர், காமதேனு மின்னிதழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியிலிருந்து...
'மேக்-அப் இல்லாமலேயே அழகா இருக்கீங்க’ன்னு ரசிகர்கள் உங்களைப் பாராட்டியிருக்கிறார்கள். அப்படி பாராட்டியபோது எப்படி உணர்ந்தீர்கள்?
மிகப்பெரிய பாராட்டு; மகிழ்ச்சிக்கு அளவில்லை. நான் பெரும்பாலும் மேக்-அப்பை நம்பி நடிப்பதில்லை. “இந்தக் கேரக்டருக்கு மேக்-அப் போட்டுக்கோங்க” என்று சொன்னால் நான் அடம்பிடிக்க மாட்டேன். இந்தப் படத்தில் அதிகமும் வீட்டில், சமையற்கட்டில் இருக்கிற ஒரு மிடில்கிளாஸ் பெண் கேரக்டர். அதற்கு மேக்-அப் போட்டு, ஹேர் ஸ்டைல் எல்லாம் செய்துகொண்டிருந்தால் இயல்பாக இருக்காது. அதனால், இயக்குநரிடம் சொல்லிவிட்டு இரண்டையுமே தவிர்த்தேன். அதற்குத்தான் இத்தனை பாராட்டு.