சினிமா பிட்ஸ்


பிட்லீ
readers@kamadenu.in

‘தி ஃபேமலி மேன்’ தொடரின் இரண்டாம் சீசனின் ட்ரைலருக்கு கடும் எதிர்ப்பலைகள் எழுந்தன. இப்போது எதிர்ப்பலைகள் அடங்கி சமந்தாவின் நடிப்புக்கும், ஃபிட்னஸுக்கும் பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றனவாம்.

வீட்டுக்காரர் என்ன சொல்றாரு?

‘அன்பறிவு’, ‘சிவகுமாரின் சபதம்’ போன்ற படங்களில் நடித்து வந்தாலும், கூடவே மியூசிக் ஆல்பம் உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஹிப்ஹாப் ஆதி. தற்போது அவரது இசையில் வெளியாகி இருக்கும் ‘இணையம்’ என்ற பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏற்கெனவே அவரின் ‘நான் ஒரு ஏலியன்’ பாடலும் ஹிட் அடித்தது. தற்போது வேறு ஒரு பாடலும் தயாரிப்பில் உள்ளதாம்.

x