வட்டார வழக்கில் பேசி நடிக்க எனக்கும் ஆசை- ஸ்ருதி ஹாசன் பேட்டி


ரசிகா
readers@kamadenu.in

அமேசான் ஓடிடி தளத்துக்காக ஒரு ‘டாக் ஷோ’, பிரபாஸுடன் இணைந்து ‘சலார்’ தெலுங்குப் படம் என பிஸியாக இருக்கும் ஸ்ருதி ஹாசன் தற்போது வசிப்பது மும்பையில். தனது சம்பாத்தியத்தில் வீடு வாங்கி அதற்காக ஈஎம்ஐ கட்டி வருவதாக சமீபத்தில் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த ஸ்ருதி ஹாசன், தமிழில் நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் படம் ‘லாபம்’. இந்நிலையில் காமதேனு மின்னிதழுக்காக அவர் அளித்த பேட்டியின் ஒரு பகுதி.

கரோனா ஊரடங்கு காலத்தில் உருப்படியாக என்ன கற்றுக்கொண்டீர்கள்?

சமைக்கவும் அடுக்களையைச் சுத்தம் செய்யவும் கற்றுக்கொண்டேன். அடுக்களையையும் வீட்டையும் தூய்மையாக வைத்திருப்பது ஒரு கலை. அது அழகுணர்ச்சியுடன் தொடர்புடையது. இதுவொரு பக்கம் இருக்க, இந்தத் தலைமுறையினர் முன் எப்போதும் இல்லாத ஓர் உறுதியற்ற வாழ்க்கைச் சூழ்நிலையை கரோனாவால் எதிர்கொண்டிருக்கிறார்கள். அதற்காக இளைஞர்கள், யுவதிகள் அஞ்சவில்லை. வெளியே சுதந்திரமாக செல்ல முடியவில்லையே என்கிற மனநிலை அவர்களுக்குச் சவாலானது.

x